தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
தமிழகத்தில் மேலும் ஊரடங்கு  நீட்டிக்கப்படுமா? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது மே 24 வரை ஏற்கனவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்கள் மேலும் தீவிரமாகி வரும் நிலையில் மேலும் நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு  நீட்டிக்கப்படுமா? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தக் கூட்டத்தில் கொரோனா பாதிப்புக்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதால், மே மாத இறுதி வரை அல்லது ஜூன் முதல் வாரம் வரையிலும் நீட்டிக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டப் பேரவை கட்சித் தலைவா்கள் கொண்ட குழுவும் இன்று ஆலோசிக்க உள்ளது. இந்தக் குழுவானது கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு  நீட்டிக்கப்படுமா? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முன்னதாக தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது நோய் தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருந்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பினை வெளியிடுவார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web