மேலும் ஒரு புதிய வைரஸ்.. சாமி முடியலடா.. நிம்மதியா வாழவிடுங்கடா

 
மேலும் ஒரு புதிய வைரஸ்.. சாமி முடியலடா.. நிம்மதியா வாழவிடுங்கடா

உலகம் முழுவதுமே கொரோனா இரண்டு வருடமாக பயமுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, ஆல்பா, பீட்டா, டெல்டா, காமா, கப்பா, லம்ப்டா, டெல்டா பிளஸ், 2வது, 3வது, 4வது என்று ஆளாளுக்கு பயமுறுத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் தொடர்ந்து நாளுக்கு நாள் உருமாறிக் கொண்டே வருகிறது.

உலக சுகாதார அமைப்பினால் கண்காணிக்கப்படுகிற 5-வது உருமாறிய வைரஸ் ‘மு’.

மேலும் ஒரு புதிய வைரஸ்.. சாமி முடியலடா.. நிம்மதியா வாழவிடுங்கடா

இது கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக பி.1.621 என்ற உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசை ‘மு’ என்று அழைக்கப்படுகிறது.

மேலும், ‘மு’ வைரஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான் உள்பட 40 நாடுகளில் காணப்படுகிறது. இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. இது வகை வைரசின் பரவல் விகிதம் 0.1%க்கு குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கொலம்பியாவில் 39%, ஈக்குவடாரில் 13% உள்ளது. தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.

இந்த புதிய உருமாறிய ‘மு’ வைரசானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு கூறினாலும், இதை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

From around the web