ஐ.நா.வின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வாகிறார்

 
ஐ.நா.வின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வாகிறார்

2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் போர்ச்சுக்கலின் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் (72) பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச்செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வரும் 18-ம் தேதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி ஆன்டனியோ குட்டரெஸ் தேர்வு செய்யப்படுவார்.

இதனால் ஆன்டனியோ குட்டரெஸ் அப்பதவியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026-ம் டிசம்பர் 31-ந்தேதி வரை ஐ.நா.வின் பொதுசெயலாளர் பதவி வகிப்பார்.

From around the web