துபாயில் நிகழும் அதிசயம்.. சார்ஜ் ஸ்டேஷனில் செல்போனை மாட்டிட்டு செல்லும் இளம் பெண்.. அடுத்து நடந்த அதிசயத்தைப் பாருங்க!

 
டெட்டியானா

துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு என்று இன்னமும் நாம காமெடி கலாட்டாக்களையும், ஒட்டகம் மேய்க்க தான் லாய்க்கு என்று கலாய்ப்பதற்கும் சொல்லி வருகிறோம். ஆனால், உலக நாடுகளில் துபாய் வேகமாக முன்னேறி வருகிறது.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது ஓங்கி உயர்ந்து நிற்கும் கட்டிடங்களில் மட்டுமல்ல என்பதை வளைகுடா நாடுகளின் அரசர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். என்ன வளம் இல்லை இத்திருநாட்டில்? என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... எந்த வளமும் இல்லை எங்கள் நாட்டில் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

மக்களின் சந்தோஷம், பாதுகாப்பு, ஆரோக்கியம், எதிர்காலம் இதெல்லாமே முக்கியம் என்று அவர்களது வாழ்க்கைத் தரம் குறித்து உண்மையிலேயே சிந்தித்த அரசு துபாய் அரசு. துபாயில் உள்ள ஒரு மாலில் உள்ள சென்சார் பாயின்ட்டில் ஒரு இளம்பெண் தனது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், வ்லாகர் Tetiana Skorina தனது ஸ்மார்ட்போனை பொதுவெளியில் இருக்கும் சார்ஜிங் பாயிண்டுடன் இணைப்பதைக் காட்டுகிறது.  வீடியோவில், டெட்டியானா தனது ஸ்மார்ட்போனை சார்ஜிங் பாயிண்டுடன் இணைத்து விட்டு ஷாப்பிங் செய்ய செல்கிறார்.

View this post on Instagram

A post shared by Tetiana Skoryna || Dubai (@tetianaskoryna)

இரண்டு மணி நேரம் கழித்து, அவர் திரும்பி வந்து தனது ஸ்மார்ட்போனை எடுத்தார்.  சார்ஜிங் பாயின்ட்டில் இருந்தது வரை யாரும் அவருடைய செல்போனை எதுவும் செய்யவில்லை என்பதைக் கவனித்தார். இந்த வீடியோ ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு நிலைகளை மையமாக வைத்து மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சந்தர்ப்பங்களில் துபாய் கடுமையான பாதுகாப்பு நிலையை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த மக்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திருட்டு ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளுக்கு உட்பட்டது.

திருடப்பட்ட பொருளின் மதிப்பின் அடிப்படையில் திருட்டுக்கான தண்டனைகள் மாறுபடும். AED 3,000 (ரூ. 68,537) அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். துபாயின் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் குறித்து உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோ 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web