சிக்குகிறது சீனா! கோடிக்கணக்கில் ஊசலாடும் சீனர்களின் உயிர்கள்!

 
சிக்குகிறது சீனா! கோடிக்கணக்கில் ஊசலாடும் சீனர்களின் உயிர்கள்!

சீனாவில் கடந்த 1,000 வருஷங்களில் இது மாதிரியான பேய் மழை பெய்ததில்லை என்கிறார்கள். இந்த பெருமழையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சீனா விழி பிதுங்கி நிற்கிறது. அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரைப் போல 10 மடங்கு நீர் அணைக்கு புதிதாய் வந்து கொண்டிருக்கிறது.

உடைந்து போன வாளியை வைத்துக் கொண்டு கிணற்றைத் தூர் வாரிக்கொண்டிருக்கும் கதையாய் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.

சிக்குகிறது சீனா! கோடிக்கணக்கில் ஊசலாடும் சீனர்களின் உயிர்கள்!

தார் சாலைகளில் எல்லாம், காட்டாறு போல தண்ணீர். நம்மூர் சுனாமி சமயத்தில் கார்களும், டூ வீலர்களும் தண்ணீரில் மிதந்து சென்றதைப் பார்த்தோம். அங்கே புது ஆற்று வெள்ளத்தில் குப்பைகள் போல கார்கள் மட்டுமல்லாமல் விமானங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. மார்பளவு வெள்ளத்தில் மெட்ரோ ரயில் சுரங்கத்தில் சீன மக்கள் மாட்டித் தவிக்கிறார்கள்.

சீன மாகாணங்கள் பல இந்த மழையில் தனித் தீவுகளாகவே மாறிப்போயுள்ளன. இன்னும் ஒரு வார காலத்துக்கு பேய் மழை இருக்கிறது என்று மேலும் அதிர வைக்கிறது உலக வானிலை மையம்.

சீனாவின் வூகான் மாகாணத்தின் சராரசரி ஆண்டு மழைப் பொழிவே 640.8 மி.மீ அளவு தான். ஆனால் இப்போது ஒரே நாளில் 457.5 மி.மீ. மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. மேலும் ஒரு வாரத்துக்கு கொட்டித் தீர்க்க தயாராக உள்ளது.
அணைகள் நிரம்பி வழிய தயாராக இருக்கின்றன. எப்போது உடையும் என்கிற கவலையுடன் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சீனர்கள்.

இன்னொரு பக்கம், அணை பகுதியில் இருந்து லட்சக்கணக்கில்… பொதுமக்களை பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தி வருகின்றனர். அணையின் அஸ்திவாரங்கள் முற்றிலுமாக ஸ்திரமற்று போய்விட்டன என்கிறார்கள். சொல்லப்போனால் ஒட்டுமொத்த சென்னையின் நிலப்பரப்பை விட பல மடங்கு பெரியது இந்த அணை.

ஒரு வேளை இந்த அணை உடைந்தால் 4 முதல் 50 கோடி பேர் ஜலசமாதி ஆவார்கள். வூகான் மாகாணத்தை விட்டு அணைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது சீனா. தற்போது சீனாவுக்கு உள்ள ஒரே தீர்வு மழை நிற்க வேண்டும். ஆனால் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என உலக வானிலை மையம் அறிவித்து விட்டது. இயற்கை தான் சீனாவை காப்பாற்ற வேண்டும்.

From around the web