உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜி7 மாநாட்டில் உறுதி!

 
உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜி7 மாநாட்டில் உறுதி!


உலகின் வளர்ந்த நாடுகளாக அறியப்பட்டுள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா இணைந்து ‘ஜி-7’ அமைப்பின் உச்சிமாநாட்டை நடத்தினர். இந்த மாநாடு இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகுதியில் ஜூலை 11ம் தேதி தொடங்கியது.

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜி7 மாநாட்டில் உறுதி!


உலக அளவில் கொரோனா தாக்கம் ஏற்பட்ட பிறகு நடத்தப்பட்ட இந்த உச்சிமாநாடு நடத்தப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.வளர்ந்த நாடுகளின் தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் நேரில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜி7 மாநாட்டில் உறுதி!
(


இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி, பெரிய நிறுவனங்களை நியாயமான வரிகளை செலுத்தச் செய்வது மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பணத்தின் உதவி கொண்டு பருவநிலை மாற்றம் பிரச்சினையை சமாளிப்பது என பல உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.


மேலும் இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ஆற்றிய உரையில் ஜோ பைடனை புதிய காற்றின் சுவாசம் என வர்ணித்தார். பெண் குழந்தைகள் கல்வி, எதிர்கால தொற்று நோய்கள் தடுப்பு, பசுமை வளர்ச்சிக்கு நிதி அளித்தல் போன்றவற்றிற்கு ஆதரவாக தலைவர்கள் ஒன்றுபட்டு உறுதி எடுத்தனர். மேலும் ஜி-7 நாடுகள் 100 கோடி தடுப்பூசிகளை வழங்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜி7 மாநாட்டில் உறுதி!

இந்த முடிவிற்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிற போது, உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 70 % பேருக்காவது தடுப்பூசி போட்டு விட வேண்டும் .கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்து பாதுகாப்புகளை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதும் நாடுகளுக்கு மிக அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
‘ஜி-7’ உச்சி மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும், மத்திய வருமான நாடுகளுக்கும் உதவுகிற விதத்தில் ஒரு உள்கட்டமைப்பு திட்டத்தை ஏற்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

From around the web