விண்வெளியில் இருந்து கால்பந்து விளையாட்டு! வைரலாகும் புகைப்படம்!

 
விண்வெளியில் இருந்து கால்பந்து விளையாட்டு! வைரலாகும் புகைப்படம்!

கிரிக்கெட் போட்டி மேட்ச் பிக்சிங், த்ரில்லிங், ஐபிஎல் என்று கோடிகளில் கல்லா கட்டினாலும், உலகில் கால்பந்து போட்டிகளுக்கு தான் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். உலகை விட்டு வெளியே சென்றாலும் விண்வெளியில் இருந்தபடியே யூரோ கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசித்துள்ளார் ஒருவர்.

நேற்று நடைபெற்ற போர்ச்சுகல் – பிரான்ஸ் இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த விளையாட்டுப் போட்டியை ரசித்துள்ளார் விண்வெளி வீரர் ஒருவர்.

விண்வெளியில் இருந்து கால்பந்து விளையாட்டு! வைரலாகும் புகைப்படம்!

நடப்பு உலக கோப்பை சாம்பியனான பிரான்ஸ் மற்றும் நடப்பு யூரோ கோப்பை சாம்பியனான போர்ச்சுகல் அணிகள் யூரோ தொடரின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்தப் போட்டியை உலகின் பல்வேறு பகுதியில் இருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் இந்த கால்பந்து விளையாட்டுப் ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார். அந்த படத்தை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி.

From around the web