வீட்டில் வளர்க்கும் நாயை மிரட்டும் பேய் நாய் !! திகிலூட்டும் வீடியோ பதிவு!!

 
வீட்டில் வளர்க்கும் நாயை மிரட்டும் பேய் நாய் !! திகிலூட்டும் வீடியோ பதிவு!!


ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் ஜேக் டிமார்கோ. இவர் வீட்டி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய்க்குட்டி, பேய் நாயுடன் விளையாடி வருகிறது எனக் கூறி அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சியை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இதனை பேய் நாய் என்று நம்ப மறுத்து, பலர் எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோவில், ஜேக் டிமார்கோவின் வீட்டில் வெள்ளை நிறத்தில் உருவமாக வரும் ஒரு நாயை செல்லக்குட்டி நாய் துரத்துகிறது. சிறிது நேரம் கழித்து அந்த பேய் நாயுடன் குட்டி நாய் விளையாடி வருகிறது.

மீண்டும் சில நொடிகள் கழித்து பேய் நாய் அதில் தெரியவில்லை.ஜேக் இந்த வீடியோவை வீட்டிற்குள் இருந்து பார்த்தது உடனடியாக அந்த ‘பேய் நாயை’ பார்க்க வெளியே ஓடி வந்ததாகவும் ஆனால் அதற்குள் அது காணாமல் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web