‘எனக்கு இதயம் கிடைச்சுடுச்சு..’ குஷியில் 6 வயது சிறுவன்...கலங்க வைக்கும் வீடியோ!

 
 ஜான் ஹென்றி

அமெரிக்காவில் ஜான் ஹென்றி என்ற சிறுவன் தன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு 5 மாத குழந்தையாக இருந்தபோது இதய பிரச்சனை ஏற்பட்டது. பிறக்கும்போதே இதயக் கோளாறுகளுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு தற்காலிக தீர்வுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், இதய மாற்று அறுவை சிகிச்சைதான் நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது 6 வயதாகும் சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இதய தானம் கிடைத்துள்ளது. கடந்த 6 வருடங்களாக புதிய இதயத்திற்காக காத்திருந்த சிறுவனுக்கு தற்போது இதயம் ஒன்று கிடைத்துள்ளது.

இது சிறுவனுக்கும் அவனது பெற்றோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது, அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். மேலும், மருத்துவ உபகரணங்களை கட்டிக்கொண்டு, "நான் ஒரு புதிய இதயத்தைப் பெறப் போகிறேன்" என்று சிறுவன் உற்சாகமாகச் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web