டெல்டாவை தொடர்ந்து வேகமாக பரவக்கூடிய லாம்ப்டா வைரஸ்

 
டெல்டாவை தொடர்ந்து வேகமாக பரவக்கூடிய லாம்ப்டா வைரஸ்

உலகம் முழுவதுமே கொரோனா இரண்டு வருடமாக பயமுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, 2வது, 3வது, 4வது என்று ஆளாளுக்கு பயமுறுத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் தொடர்ந்து நாளுக்கு நாள் உருமாறிக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் முதன் முதலாக ‘பி.1.617.2’ என்ற உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ‘டெல்டா’ என்னும் பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியது.

இப்போது இந்த டெல்டா வைரசும் உருமாறி இருக்கிறது. இது ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த லாம்ப்டா வகை வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாகவும், இது டெல்டா வைரஸை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதா இருக்கும் என்று கூறப்படுகிறது.

லாம்ப்டா வைரஸ் பெரு நாட்டில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாம்ப்டா வைரஸ் வீரியமிக்கது, வேகமாக பரவக்கூடியது என்பதால் மூன்றாவது அலை பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஐரோப்பிய நாடுகள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் நிலையில், லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என இங்கிலாந்து சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

From around the web