ஒமைக்ரான் வைரஸால் உயிரிழப்பு இல்லை- உலக சுகாதார அமைப்பு

 
ஒமைக்ரான் வைரஸால் உயிரிழப்பு இல்லை- உலக சுகாதார அமைப்பு

உலகளவில் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தாலும், தென் ஆப்ரிக்கா உட்பட வேறு எந்த நாடுகளிலும் இதனால் உயிரிழப்பு இதுவரை ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 38 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உலகையே அதிர வைத்துள்ளது. முதலாவதாக தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் இங்கிலாந்து, ஜெர்மனி, இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் பரவியது.

ஒமைக்ரான் வைரஸால் உயிரிழப்பு இல்லை- உலக சுகாதார அமைப்பு

தற்போது அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் இதுவரை கர்நாடகா, மராட்டியம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 21 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தேசியளவிலுள்ள பன்நாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா சோதனைகள் கட்டாயம் எடுக்கப்படுகிறது. அதில் முடிவு தெரிந்த பின்னரே பயணிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒமைக்ரான் வைரஸால் உயிரிழப்பு இல்லை- உலக சுகாதார அமைப்பு

உலகளவில் 390-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த உருமாற்றமடைந்த வைரஸால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் ஒமைக்ரான் வைரஸை நாம் எதிர்கொள்ள தயாராக இருப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது.

உருமாறிய வைரஸ் குறித்து தற்போது உறுதியாக கணித்து சொல்ல முடியாது. தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் மற்றும் அதனுடைய பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனினும், பொதுமக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிவது, கைகளை நன்றாக கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை பின்பற்றுவது பாதுகாப்பாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

From around the web