பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

 
பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸான ஒமிக்ரான் தற்போது பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் கண்டறியப்பட்டிருப்பது ஐரோப்பிய மக்களிடம் பெரும் பீதியை உருவாக்கி உள்ளது.

பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு உருவமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான், வேகமாக பரவும் தன்மை கொண்டது என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

இதற்கிடையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் ஜெர்மனி நாட்டில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரில் வசிக்கும் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதே போல் இங்கிலாந்திலும் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

இதனையடுத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அவசராமக செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘தொடக்க நிலையில் புதிய வகை கொரோனாவை பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால், ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. முழு அளவில் (இரண்டு டோஸ்) தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களை கூட ஒமிக்ரான் வைரஸ் தாக்கும் என தெரிய வருகிறது’ என்று கூறியுள்ளார்.

From around the web