பயனர்களே உஷார்! கூகுளின் இந்த இலவச சேவை நிறுத்தம்!

 
பயனர்களே உஷார்! கூகுளின் இந்த இலவச சேவை நிறுத்தம்!


உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களின் தரவுகளை உடனுக்குடன் தேர்ந்தெடுத்து தருவதில் கூகுள் தொடர்ந்து முண்ணனியில் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட காலம் அளித்து வந்த சேவையை திடீரென கூகுள் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்தி விட்டது.

இந்த உத்தரவின் படி கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களைக் கடந்து பயன்படுத்த முடியாது.2020 ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால் கூகுள் மீட் குரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது. உலகளாவிய கூகுள் பயனர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இது பேருதவியாக இருந்தது. கூகுள் மட்டுமின்றி ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், கூகுள் தனது இலவச சேவையை தற்போது நிறுத்தி இருக்கும் நிலையில், ஜூம் ஆப்பில் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. முன்னதாக, செப்டம்பர் 30, 2020 முதல் இலவச வரம்பற்ற குரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. எனினும், இந்த தேதியை 31 மார்ச் 2021 மற்றும் ஜூன் 30, 2021 வரை நீட்டித்தது குறிப்பிடத்தகக்து.

From around the web