இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? 3 வயசு குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! சீனாவில் அங்கீகாரம்!

 
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? 3 வயசு குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! சீனாவில் அங்கீகாரம்!

உலகம் முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை 10வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கி வருகிறது.

இந்நிலையில் சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தடுப்பூசியினை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு கொரோனாவேக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் தனது அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது. “கொரோனாவேக் தடுப்பூசி எப்போது அவசர பயன்பாட்டுக்கு வரும், எந்த வயதில் இருந்து இந்த தடுப்பூசியை வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதனை சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையும் உறுதி செய்துள்ளது. இதுவரை இந்த தடுப்பூசிகள் 3-17 வயதுள்ள தன்னார்வலர்களுக்கு செலுத்தி சைனோவேக் நிறுவனம் பரிசோதித்து உள்ளது.

From around the web