இன்று ரமலான் நோன்பு!
உலகம் முழுவதும் கடந்த 30 நாட்களாக நோன்பு கடைப்பிடித்து வருகிறார்கள் இஸ்லாமிய சகோதரர்கள். அவர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு இருந்து வருகின்றது. இந்த ரமலான் மாதத்தில் கடுமையான விரதம், கூடுதல் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த நோன்பின் இறுதியில் ஜக்காத் கடமையை நிறைவேற்றி ரமலான் பண்டிகையை கொண்டாடுவர்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையில் ஒன்றான ரமலான் பண்டிகையின் நோன்பு ஏப்ரல் 14ம் தேதி தொடங்கியது இறைவனின் திருவசனங்கள் இறங்கிய மாதம் என்பதால் ரமலான் மாதத்தில் தனிச்சிறப்புடன் கடைப்பிடிப்பர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் இரண்டு கடமைகளை ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கின்றனர்.
அதன்படி சூரிய உதயத்துக்கு முன் உணவு உண்டு, இடையில் அன்னம், தண்ணீர் இல்லாமல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பர். இந்நிலையில் ரமலான் பண்டிகைக்கான பிறை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் இன்று மே 14ம் தேதி வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
