நாளை சித்ரா பெளர்ணமி! இதை கடவுளுக்கு படைத்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்!

 
நாளை சித்ரா பெளர்ணமி! இதை கடவுளுக்கு படைத்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்!

எல்லா பௌர்ணமிகளும் சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. சித்ரா பௌர்ணமி தினத்தில் காலை முதலே விரதம் இருந்து மாலை பௌர்ணமி நிலவு வந்ததும் சித்ரான்னங்களை அம்பிகைக்கு படையலிட்டு அம்பிகை துதிகள், பாடல்கள், அபிராமி அந்தாதி பாராயணம் செய்து அன்னதானம் செய்து பின் உணவருந்த வாழ்வில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. மேலும் திருமண யோகம், குழந்தை பாக்கியம் மட்டுமல்ல வேண்டியது அனைத்தையும் அள்ளி வழங்குவாள் அம்பிகை என்பது ஐதிகம்.

நாளை சித்ரா பெளர்ணமி! இதை கடவுளுக்கு படைத்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்!


அம்பிகையுடன் அவளின் அருள் பெற்ற எமலோகத்தில் நம் புண்ணிய – பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்ரகுப்தனையும் வழிபட நீண்ட ஆயுள் பெறலாம்.
சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் அம்பிகையின் திருவுருவ சிலை அல்லது படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வஸ்திரம், ஆபரணங்களை அணிவிக்க வேண்டும். அத்துடன் மஞ்சள் கலந்த சாதம், பானகம், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்த தாம்பூலம் அடங்கிய நைவேத்தியத்தைப் படைப்பது சிறப்பு. இல்லங்களில் பெளர்ணமி பூஜை,திருவிளக்கு பூஜை செய்வது கூடுதல் சிறப்பு.

நாளை சித்ரா பெளர்ணமி! இதை கடவுளுக்கு படைத்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்!


சித்ரா பௌர்ணமி தினத்தில் வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன் சித்திரகுப்தன் படத்தில் எழுத்தாணியுடன் இருப்பது போல் பச்சரிசி மாவால் கோலம் இட வேண்டும்.பகல் முழுவதும் உபவாசம் இருக்கலாம். இயலாதவர்கள் உப்பில்லாத உணவுகளை உண்ணவேண்டும்.
மாலையில் பௌர்ணமி வந்ததும் குலதெய்வத்தை மனதில் பிரார்த்தித்து , விநாயகர் வழிபாடு செய்து சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும்.

நாளை சித்ரா பெளர்ணமி! இதை கடவுளுக்கு படைத்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்!

தலைவாழையில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் கலந்த சாதம், ஜவ்வரிசி பாயசம் , தட்டைப்பயிறு , மாங்காய் குழம்பு இவற்றை தாம்பூலத்துடன் வைத்து வழிபட வேண்டும். இயன்ற அளவு அன்னதானம் செய்வதுடன் படிக்கும் பிள்ளைகளுக்கு பேனா, பென்சில் , நோட்டு , புத்தகம் வாங்கி கொடுக்கலாம். அதன் பின் உணவருந்த வாழ்வில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. மேலும் திருமண யோகம், குழந்தை பாக்கியம் மட்டுமல்ல வேண்டியது அனைத்தையும் அள்ளி வழங்குவாள் அம்பிகை.சித்ரா பௌர்ணமியில் அம்பிகை வழிபாடு செய்வோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

dinamaalai.com