Connect with us

அரசியல்

கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்தை ஆன்மீகம் போக்கும்: குடியரசு துணைத் தலைவர்

Published

on

கொரோனா தொற்றை முன்னிட்டு, மன நலத்தை பொது சுகாதார பிரச்சினையாக கருதி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

கம்போடியா மற்றும் வியட்நாமில் உள்ள பழங்கால இந்து கோயில்கள் பற்றி ஆந்திரப் பிரதேச முன்னாள் எம்எல்ஏ என்.பி. வெங்கடேஸ்வர சவுத்திரி ‘கம்போடியா – இந்து தேவாலயலா புன்னிய பூமி மற்றும் நேதி வியட்நாம் – நாதி ஹைன்தவா சம்ஸ்கிருதி’ என்ற தலைப்பில் எழுதிய இரண்டு தெலுங்கு புத்தகங்களை காணொலி காட்சி மூலம் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

வேகமான, மந்தமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவது, மக்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில், ஆன்மீகம் பதற்றங்களை தணிக்கும். ஆன்மீக தலைவர்கள் ஆன்மீகம் மற்றும் சேவைகளை இளைஞர்களிடமும், மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு குடும்பமாக பார்ப்பது இந்திய வாழ்க்கை முறை. நாட்டின் பழமையான நெறிமுறைகளையும், பாரம்பரியத்தையும் இந்திய இளைஞர்கள் நிலை நிறுத்த வேண்டும். நமது கலை நினைவுச் சின்னங்கள், கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்கள் பார்த்து, நமது பழங்கால சின்னங்களில் இருந்து உத்வேகம் பெற வேண்டும்.

கம்போடியா மற்றும் வியட்நாமில் உள்ள பழங்கால இந்து கோயில்களின் கலை மற்றும் கட்டிடக் கலை ஆகியவை பழங்கால இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயிலுக்கு நான் சென்றுள்ளேன். இது போன்ற கோயில்களுக்கு செல்ல இளைஞர்கள் முயற்சித்து இந்தியாவின் மிகச் சிறந்த கடந்த காலத்தை அறிய வேண்டும்.

இந்தியாவில் உள்ள கோயில்கள், நமது வரலாற்றில், முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கற்றலின் முக்கிய மையங்களாக உள்ளன. மக்களின் சமூக வாழ்வில், கோயில்கள் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இசை, நடனம், நாடகம் மற்றும் சிற்பங்களின் மையங்களாக கோயில்கள் வளர்ந்தன. சுயராஜ்ய இயக்கத்தில், கோயில்கள் முக்கிய பங்காற்றின. இந்த புத்தகங்கள் மூலம் கம்போடியா மற்றும் வியட்நாமில் உள்ள கோயில்கள் பற்றி அருமையான தகவல்களை தெரிவிக்கும் நூலாசிரியர் என்.பி. வெங்கடேஸ்வர சவுத்திரியின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. என்று குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடம் முன்னாள் மடாதிபதி சுவாமி ஜெயேந்திர சரஸ்வதியின் பிறந்த தினத்தில் அவருக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். சுகாதாரம் மற்றும் கல்வியில் அவரது சமூக நல நடவடிக்கைகளையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

இந்த காணொலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜேந்திர சரஸ்வதி, என்.பி.வெங்கேடேஸ்வர சவுத்திரி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

செய்திகள்4 mins ago

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

ஆன்மிகம்13 mins ago

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

அரசியல்19 mins ago

மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று கண்டன போராட்டம்

செய்திகள்35 mins ago

இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

ஆன்மிகம்2 hours ago

உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

ஆன்மிகம்2 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்காது…! வீண் அலைச்சல் உண்டாகும்!

ஆன்மிகம்2 hours ago

மிஸ் பண்ணாதீங்க!! புரட்டாசி மாத பௌர்ணமி விரதத்துக்கு இத்தனை பலன்களா??

ஆன்மிகம்3 hours ago

ஏன் பெளர்ணமி பூஜை விசேஷம்?! புரட்டாசி பெளர்ணமியன்று விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

gold shop girls saree
செய்திகள்3 hours ago

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

செய்திகள்12 hours ago

தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு! நிபுணர்கள் விளக்கம்!

இந்தியா2 weeks ago

15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

செய்திகள்2 months ago

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அரசியல்5 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்5 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்4 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

செய்திகள்3 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

அரசியல்3 weeks ago

பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

அரசியல்4 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending