காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

 
காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

மற்றொரு மைல்கல் சாதனையாக, இந்தியாவின் பரிந்துரையால், தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும் ருத்ரேஷ்வரா கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த முடிவு இன்று நடந்த, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழுவின் 44வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

13ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதமான ராமப்பா கோயிலை உருவாக்கியவர் ராமப்பா. இதை 2019ம் ஆண்டுக்கான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடம் பட்டியலில் சேர்க்கும்படி மத்திய அரசு பரிந்துரை செய்தது.

காகத்தியா ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய இடமாக, யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கம்பீரமான இந்த கோயில் வளாகத்துக்கு சென்று, அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள டுவிட்டுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் ;

அருமை! அனைவருக்கும், குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள்.

நினைவு சின்னமான ராமப்பா கோயில், மிகச் சிறந்த காகத்தியா வம்சத்தின் சிறப்பான கைவினைத்திறனைக் காட்டுகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தை பார்வையிடவும், அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தைப் பெறவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

From around the web