வைரலாகும் வீடியோ... கங்கா ஆரத்தியில் நடிகை சன்னி லியோன்!

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், நேற்று மாலை நடிகை சன்னி லியோன் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Ganga mein paap dhul gaye… #SunnyLeone participated in #GangaAarti #Varanasi pic.twitter.com/6vVw77AvWL
— Mubashir.Khurram (@infomubashir) November 16, 2023
உத்திர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற கங்கா ஆரத்தியில் நடிகை சன்னி லியோன் நேற்று மாலை கலந்து கொண்டார். இவர் நடிகரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அபிஷேக் சிங்குடன் கலந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன்னி லியோன் மற்றும் அபிஷேக் சிங் இருவரும் இணைந்து ’தேர் பார்ட்டி’ என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்துள்ளனர். இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்தப் பாடலுக்கான புரோமோஷனின் ஒரு பகுதியாகவே சன்னி லியோன் கங்கா ஆரத்தியில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. சல்வார் அணிந்து கொண்டு நடிகை சன்னி லியோன் பங்கேற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!