இன்று தை அமாவாசை... என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?!

 
அமாவாசை தினத்தில் இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!

ஒவ்வொரு மாதமும் திதியும் வருகிறது என்றாலும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை திதிகள் மிக முக்கியமானவை. பொதுவாக அமாவாசை தினத்தன்று பலரும் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து, கோலமிடுவார்கள். அது பெரும் தவறு. அமாவாசையன்று வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்களின் படங்களுக்கு பூ வைத்து வழிபடாமல், அமாவாசையன்று துளசி சாற்றி வழிபட வேண்டும். 

மகாளய அமாவாசை!! மறக்காதீங்க!!!பித்ருக்களை இப்படி வழிபட்டால் வாழ்வு சிறக்கும்!!
தை மாதத்தில் வருகின்ற அமாவாசை ஏன் விசேஷம் என்றால், தை மாத அமாவாசையன்று நாம் செய்கின்ற தர்ப்பணம், பித்ருக்கள் நம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர்லோகம் திரும்பி செல்வதாக ஐதீகம்.

தை அமாவாசை தர்ப்பணத்தை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில், தலை வாழையிலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, அதன் பின்னர் காக்கைக்கு வைத்து விட்டு, உணவு சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும். பசுவுக்கு அகத்திக்கீரை தருவது இன்னும் சிறப்பு. 

சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம் அல்லது முன்னோர்களுக்கு உணவு படைக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து விட்டு, காக்கைக்கு உணவு வைத்து விட்டு அதன் பின்னர் சாப்பிடலாம். காகம், நம் பித்ருக்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. சாதத்துடன் காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் நம் வீட்டிற்கு சாப்பிட வந்திருப்பதாகவும், நம் சந்ததியினரை ஆசீர்வதிப்பதாகவும் ஐதீகம்.

அமாவாசை

இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.

பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை  போன்றவைகளை வறியவர்களுக்கு தானமாக வழங்கலாம். கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்கலாம். அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும்  நம்பிக்கை. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web