விஸ்வகர்மா ஜெயந்தி விழா... பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு ஊர்வலமாக வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் முதல்முறையாக விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விஸ்வகர்மா சமுதாயத்துக்கு உட்பட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு விஸ்வகர்மா திருவுருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்ட பின் தீபாதாரணைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறுமிகள் உட்பட 250 பெண்கள் கலந்து கொண்டு, மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த மாவிளக்கு ஊர்வலமானது தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், மதுரை சாலை மற்றும் நான்கு ராத வீதி வழியாக நையாண்டி மேளம் மற்றும் வானவேடிக்கையுடனும் மாவிளக்கு ஊர்வலம் காவல்துறையின் பாதுகாப்புடன் விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விஸ்வகர்மா திரு உருவப்படத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!