எந்த திதியில் தர்ப்பணம் தருவீர்கள்? ஒவ்வொரு திதிக்கும் என்ன பலன்கள் தெரியுமா?

 
எந்த திதியில் தர்ப்பணம் தருவீர்கள்? ஒவ்வொரு திதிக்கும் என்ன பலன்கள் தெரியுமா?

பித்ருக்களை சாந்தப்படுத்த திதி கொடுக்கும் போது, பலரும் ஏதோ விளையாட்டாக அதை ஒரு சாஸ்திரமாகவோ, சடங்காகவோ நினைத்து செய்கிறார்கள். ஆனால், நாம் ஒவ்வொரு திதி அன்றும் செய்யும் தர்பணத்திற்கான பலன்கள் வேறுபடுகின்றன.

எந்த திதியில் தர்ப்பணம் தருவீர்கள்? ஒவ்வொரு திதிக்கும் என்ன பலன்கள் தெரியுமா?

பொதுவாக பலரும் புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கலாம். புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்குரிய மாதம். இந்த மாதம் உயிர் நீத்த நமது முன்னோர்களை வழிபாடுவதற்கான சிறந்த காலமும் கூட. இந்த மஹாளய பட்சத்தில் வரும் ஒவ்வொரு திதிக்கும் தனித்தனியே விசேஷம் உண்டு. இந்த நாட்களில், நமது பித்ருக்களுக்கு நம்மை வந்து காணும் அனுமதி உண்டு. இந்த நாட்களில் முன்னோர்களின் பெயர் சொல்லி அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை அர்க்யம் கொடுப்பது அத்தனை பலன்களைத் தரும். இதில், ஒவ்வொரு திதிக்கும் தனித்தனியே பலன்கள் உண்டு.

எந்த திதியில் தர்ப்பணம் தருவீர்கள்? ஒவ்வொரு திதிக்கும் என்ன பலன்கள் தெரியுமா?
  • பிரதமை திதி – பணம் சேரும்
  • துவிதியை திதி – ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
  • திரிதியை திதி – நினைத்தது நிறைவேறுதல்
  • சதுர்த்தி திதி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
  • பஞ்சமி திதி – செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
  • சஷ்டி திதி – புகழ் கிடைத்தல்
  • சப்தமி திதி – தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
  • அஷ்டமி திதி – அறிவாற்றல் கிடைத்தல்
  • நவமி திதி – திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
  • தசமி திதி – நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • ஏகாதசி திதி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
  • துவாதசி திதி – தங்கநகை சேர்க்கை உண்டாகும்.
  • திரயோதசி திதி – தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
  • சதுர்த்தசி திதி – ஆயுள் விருத்தியாகும், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
  • மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குவார்கள்.
எந்த திதியில் தர்ப்பணம் தருவீர்கள்? ஒவ்வொரு திதிக்கும் என்ன பலன்கள் தெரியுமா?

எனவே, மஹாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால், லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மஹாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.