இன்று பக்ரீத் பண்டிகையில் ஆடு,மாடு, ஒட்டகம் பலியிடப்படுவது ஏன்?

 
இன்று பக்ரீத் பண்டிகையில் ஆடு,மாடு, ஒட்டகம் பலியிடப்படுவது ஏன்?


பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நாளில் அசைவ உணவுகளை சமைத்து சுற்றியிருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வர். இந்த நாளில் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலியிடப்படும்.


இஸ்லாமியர்களில் ஐந்து கடமைகளில் ஒன்று ‘ஹஜ்’ பயணம் செய்வது. ஹஜ் பயணம் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதே .புனித கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதல். இந்நாளில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படும்.

இன்று பக்ரீத் பண்டிகையில் ஆடு,மாடு, ஒட்டகம் பலியிடப்படுவது ஏன்?


நபி இப்ராஹிம் தாம் வாழ்ந்த காலத்தில் கொடுங்கோல் ஆட்சியிலும் இறைக்கொள்கையை முழங்கியவர். உலகின் பல நாடுகளுக்கும் சென்று அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். இறைப்பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள் . இறைவன் அருளால் நபி இஸ்மாயில் பிறந்தார். இதனால் இறைவன் மீது பற்று அதிகரித்தது.

ஒருமுறை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவு வந்தது. இதனால் நபி மிகுந்த கவலையில் ஆழ்ந்தார். தாம் கண்ட கனவை இப்ராஹிம் நபி, தம்முடைய அன்பு மகனிடம் தெரிவித்தார். உடனே அவரது பிள்ளை ‘‘கனவில் வந்த இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றுங்கள் தந்தையே என்று தன்னுடைய தந்தையிடம் தெரிவித்தார்.


தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கோடாரியையும் அவரே கொண்டுவந்து கொடுத்தார். அந்தச் சமயம், `சிஃப்ரயீல்’ எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அல்லாஹ் அந்த ‘பலி’யைத் தடுத்து நிறுத்தினார்.
அங்கே மகனுக்கு பதில் ஆட்டை இறக்கி வைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு கட்டளையிட்டார். நபி இஸ்மாயில் தியாகமும் போற்றப்படுகிற நாளாக ஹஜ் பெருநாள் எனப்படும், ‘பக்ரீத்’ போற்றப்படுகிறது.
பலியிடல், தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த பக்ரீத் நாளில் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், மூன்றாவது பங்கை குடும்பத்திற்கும் தரவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக கருதப்படுகிறது. இந்த நாளில் நபிகளின் தியாகத்தை உணர்வோம். நமக்கு கிடைத்ததை அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்.

From around the web