undefined

 தீர்ப்பில் அதிருப்தியடைந்த நபர், நீதிபதி மீது   செருப்பு வீசி தாக்க முயற்சி ! 

 
 

1997ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோமித்பூர் பகுதியில் ஏற்பட்ட சிறிய தகராறு, 28 ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது காய்கறி வாங்கச் சென்ற ஒருவரை, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அடித்த பந்து தாக்கியதாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நான்கு இளைஞர்களை போலீசில் புகார் செய்தார்.

2009ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அகமதாபாத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் நான்கு இளைஞர்களையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது. இதனை எதிர்த்து மனுதாரர் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு நேற்று அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்ததும், அதில் ஆத்திரமடைந்த மனுதாரர் திடீரென தனது செருப்பை கழற்றி நீதிபதியை நோக்கி வீசி தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் உடனடியாக அவரை கட்டுப்படுத்தி நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?