பொலிவான பிரகாசிக்கும் சருமம் வேண்டுமா? இதை செய்தாலே போதும்!!

 
பீட்ரூட்

அழகான பொலிவான பிரகாசிக்கும் மாசற்ற முகத்தையே பெண்கள்  அனைவரும் விரும்புகின்றனர். அதை பெறுவதற்கு ஆயிரக்கணக்கில் ப்யூட்டி பார்லர்களில் செலவு செய்து மணிக்கணக்கில் நேரத்தை செலவழிக்க தேவையில்லை.. இதனை வீட்டிலேயே இயற்கையான சில வழிமுறைகளை கடைப்பிடித்தே பெறலாம். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மட்டுமல்ல வீட்டிற்குள் இருக்கும் போது கூட சுற்றுச்சூழல் , மாசுபாடுகளால் சருமம் பொலிவை இழந்து விடுகிறது.இதனை தக்க வைக்க போராட வேண்டியிருக்கிறது.   சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர்களும் அனைவரும் விரும்பும் அழகையோ, பொலிவையோ தருவதில்லை.  


ஆனால் இவற்றை போலவே இயற்கையான பழங்கள் மற்றும் காய்கள் சருமத்தை பளபளப்பாக ஆரோக்கியமாக மாற்றும் என்கின்றனர் ப்யூட்டிசியன்கள்.   ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை அடைய வீட்டிலேயே தயாரித்து குடிக்கும் பீட்ரூட் ஜூஸை குறித்து பார்க்கலாம்.  ஜொலிக்கும் சருமத்திற்காக ஒரே நேரத்தில் பல பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட பலரும் விரும்புவதில்லை.  

பீட்ரூட்
தேவையான பொருட்கள் 


பீட்ரூட் - 1
ஆரஞ்சு - 1
கேரட் - 1
கிரீன் அல்லது ரெட் ஆப்பிள் - 1
 வெள்ளரிக்காய் - 1
 தக்காளி - 1

பீட்ரூட் - இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்  ஸ்கின் டோனை சமன் செய்யவும் சருமத்தை ஈரப்பதமாக, மென்மையாக மற்றும் மிருதுவாக வைக்கவும் உதவுகிறது.
ஆரஞ்சு - இந்த பழத்தில் இருக்கும் அதிக அளவிலான வைட்டமின் சி சருமத்தை பிரகாசமாக்கும். அத்துடன் பளபளப்பாக வைக்கவும்  உதவுகிறது.


கேரட் - கேரட்டுக்கு ஆரஞ்சு நிறத்தை அளிக்கும் பீட்டா கரோட்டின்  சருமத்தை பிரகாசமாக்கி பளபளப்பாக்க உதவுகிறது.
 
ஆப்பிள் - வயதாகும் அறிகுறிகளைக் குறைக்க மற்றும் சருமத்திலிருந்து இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் ஆப்பிள்  ஒரு இயற்கையான ஸ்கின் டோனராக இருக்கிறது.
வெள்ளரி - இது தோல் அழற்சியை குறைத்து சருமத்தை பிரகாசமாக்குகிறது,  


தக்காளி -  சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கிறது. சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையை குறைக்கிறது.  


செய்முறை:

பீட்ரூட்
பீட்ரூட், ஆரஞ்சு, கேரட், ஆப்பிள், வெள்ளரி, தக்காளி உட்பட  அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.  இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்து   நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். சருமத்தை பளபளப்பாகும் ஜூஸ் ரெடி.இதனை தொடர்ந்து குடித்து வர ஆரோக்கியமான பொலிவான சருமத்தை பெறலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web