திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

 
முதலையை விழுங்கிய பாம்பு

அமெரிக்காவில்  புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆகஸ்ட்டில் இவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்னும் அநேக மலைப்பாம்புகள் அந்த பகுதியில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் விஞ்ஞானி ரோசி மூர் தனது இன்ஸ்டாவில் அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் எவர்க்ளேட்சில் 18 அடி பர்மிஸ் மலைப்பாம்பு 5 அடி நீளமுள்ள முதலையை விழுங்கி விட்டது.அந்த முதலையை காக்க மலைப்பாம்பை கருணைக் கொலை செய்தனர்.

புளோரிடா மாகாணத்தை பொறுத்தவரை மிதமான வெல்ல மண்டல சூழல் விரைவான இனப்பெருக்கம் இவைகளின் காரணமாக  மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  கருணைக்கொலை செய்யப்பட்ட  இந்த மலைப்பாம்பை நெக்ரோஷ்கோபி மற்றும் அறிவியல் மாதிரி சேகரிப்பு மையத்திற்கு அனுப்பி இதுகுறித்து ஆராய்ச்சி செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web