பகீர்... சொத்தை முதல் மனைவிக்கு கொடுத்ததால் ஆத்திரம்... கணவனை கொன்று புதைத்த 2வது மனைவி!

 

தனது சொத்து முழுவதையும் விற்று, முதல் மனைவிக்கு கொடுத்ததால் ஆத்திரத்தில் கணவனைக் கொன்று புதைத்த 2வது மனைவியைப் போலீசார் கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் சன்ஹொ கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாலி.  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன் ராம்பாலி திடீரென மாயமானார். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வசித்து வருகிறார். ராம்பாலி, தனது இரண்டாவது மனைவி சம்பாவுடன் ராஞ்சியில் வசித்து வந்தார்.

ராம்பாலியின் காணாமல் போனது குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசாருக்கு, ராம்பாலியை அவரது 2வது மனைவி சம்பா கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. இது குறித்து சம்பாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, அவர் கணவர் ராம்பாலியை கூலிப்படையை ஏவி கொலை செய்து புதைத்ததாக ஒப்புக்கொண்டார்.

ராம்பாலி தனது சொந்த நிலம் உள்ளிட்ட சொத்துக்களை விற்று அந்த பணத்தை வாரணாசியில் உள்ள முதல் மனைவிக்கு கொடுத்துள்ளார். இதை அறிந்த சம்பா, ராம்பாலியுடன் வாக்குவாதம் செய்த பின்னர், தனது உறவினர் விஷ்ணுவுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன் பின்னர் தனது கணவரைக் கொலை செய்து உடலை புதைத்த சம்பாவும், அவரது உறவினர் விஷ்ணு உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ராம்பாலியின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?