பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டில் மாரடைப்பால் மரணம்!
மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டில் (வயது 66) வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். அகல்யாநகர் மாவட்டம் ரகுரி தொகுதியை சேர்ந்த அவர், கடந்த ஒரு ஆண்டாக முதுகுத் தண்டுவட பிரச்சினையால் பொதுநிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார்.
சிவாஜி கார்டில், தனது அரசியல் வாழ்க்கையை உள்ளாட்சித் தலைவராகத் தொடங்கியவர். 6 முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் 5 முறை தொடர் வெற்றி பெற்றார். அவர் சுயேச்சையாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாகவும் சட்டப்பேரவைக்கு தேர்வான அனுபவம் பெற்றவர்.
அவரின் மகன் அக்ஷய் கார்டில் அகல்யாநகர் தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக உள்ளார். மருமகன் சங்க்ராம் ஜெகதாப் தற்போதைய எம்எல்ஏவாக உள்ளார். குறிப்பிடத்தக்கது என்னவெனில், சிவசேனை தலைவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிவாஜி கார்டில் தண்டனை பெற்றிருந்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!