அரிய தோல் நோயால் அவதிப்படும் பிரபல பாலிவுட் நடிகை !
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் பூமி பட்னேகர், தன் கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். சமீபகாலமாக வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது உடல்நிலை குறித்து அவர் வெளிப்படையாக பகிர்ந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அவர் கூறியதாவது: “எனக்கு ‘எக்ஸிமா’ என்ற அரிய வகை தோல் நோய் உள்ளது. இது சிறுவயதிலிருந்தே இருந்து வந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் முழுமையாக கண்டறியப்பட்டது. குறிப்பாக அதிகமான மன அழுத்தம் அல்லது தொடர்ச்சியான பயணங்களின்போது, என் தோலில் தடிப்புகள் மற்றும் கடுமையான அரிப்பு ஏற்படும்.” என தெரிவித்தார்.
இந்நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறிய பூமி, “இந்த பிரச்சினையால் சில நேரங்களில் மனதளவில் சோர்வடைவேன், ஆனால் அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன்” என கூறியுள்ளார். அவரது தைரியமான இந்த வெளிப்பாடு பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!