undefined

முன்னாள் முதல்வர் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்! 

 
 

கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய வேளாண் துறை அமைச்சருமான ரவி நாயக் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு 79 வயதாகும். கோவா போண்டாவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கத்திலேயே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரவி நாயக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரவி நாயக், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியில் 1980 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் காங்கிரஸில் இணைந்து 1991 மற்றும் 1994 ஆகிய இரு முறை மொத்தம் 850 நாட்கள் கோவா முதல்வராகப் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவா காங்கிரஸின் மூத்த தலைவராக விளங்கிய ரவி நாயக், 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். அவரின் மறைவு கோவா அரசியலுக்குப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?