பீகாரில் ரூ.34 கோடி ரொக்கம், மதுபாட்டில்கள் பறிமுதல்... பறக்கும் படை சோதனையில் அதிர்ச்சி!
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக பீகாரில் பறக்கும் படைகள் தீவிரச் சோதனைகளை நடத்தி வருகின்றன. வாக்காளர்களுக்கு ரொக்கப்பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணிப்பு குழுக்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் பறக்கும் படைகள் கூட்டாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் தற்போது வரை மொத்தம் ரூ.34 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் ரொக்கப்பணத்துடன், மதுபாட்டில்கள் மற்றும் வாக்காளர்களை கவரும் இலவச பொருட்களும் அடங்கியுள்ளது. அதிகாரிகள், தேர்தல் நடத்தை சீராக நடைபெறுவதற்காக இந்தச் சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!