புதுச்சேரி சிறுமி படுகொலை... குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலைச் செய்யப்பட்டு கால்வாயில், கோணியில் அடைக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறைக் கழிவறையில் நேற்று தற்கொலைச் செய்துக் கொண்டார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை சீரழித்துக் கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கருணாஸ் மற்றும் 59 வயது விவேகானந்தன் இருவருமே உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டார். சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!