கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை! ஆந்திராவில் மடக்கிப் பிடித்து, மாணவியை மீட்ட போலீசார்!

 
பகீர்!! 15 வயது சிறுமி!! 6  சிறுவர்கள்!!  3 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை!!

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகில் அமைந்துள்ளது பாடியநல்லூர். அந்த பகுதியில் வசித்து வரும் தம்பதியருக்கு 17 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அந்த 17 வயது கல்லூரி மாணவி, பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இம்மாதம் 12ம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்ற மாணவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களிலும் அவரைத் தேடியிருக்கிறார்கள்.

சந்தோஷ் குற்றவாளி

எங்கு தேடியும் மாணவியைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், கவலையடைந்த பெற்றோர் இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள். செங்குன்றம் காவல் துறையினர், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர்.

செங்குன்றம் மொண்டியம்மன் நகர், நேரு தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (18) என்ற எலக்ட்ரீஷியன் அந்தக் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.  தொடர்ந்த விசாரணையில், எலக்ட்ரீஷியன் சந்தோஷ், கல்லூரி மாணவியை ஆசை வார்த்தைகள் பேசி ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றார் என்பதும், அங்குள்ள நண்பர் ஒருவரது வீட்டில் மாணவியைத் தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்து, வன்கொடுமை செய்து வந்ததும் தெரிய வந்தது.

பகீர்!! +1 மாணவியை கர்ப்பமாக்கிய 55 வயது உறவினர்!! தமிழகம் முழுக்கவே தலைவிரித்தாடும் பாலியல் சீண்டல்கள்!!

இதனைத் தொடர்ந்து செங்குன்றம் காவல் துறையினர் இந்த வழக்கை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டார்கள். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி தலைமையிலான காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்தார்கள். பின்னர் தலைமறைவாக இருந்த குற்றவாளி சந்தோஷைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளார்கள்.
காவல் துறையின் இந்தச் சிறப்பான செயல்பாடு அனைத்துத் தரப்பினரிடையேயும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இந்த திதியை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பகீர்! 4வது மாடியின் விளிப்பில் நின்று கண்ணாடியைத் துடைக்கும் பெண்மணி!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web