பகீர்!! சாகச பெண்மணி! 4வது மாடியில் ஜன்னல் விளிப்பில் நின்றபடியே கண்ணாடியைக் கழுவும் பெண்மணி!! வைரல் வீடியோ!!

 
balcony

நகரமயமாகி வரும் சூழலில், தலைநகர் டெல்லியில் வானை முட்டுகிற அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஷிப்ரா ரிவியரா சொசைட்டி குடியிருப்பு பகுதியில், சொசைட்டியின் ஏ பிளாக்கில்  4 வது மாடியில் 45 வயதான பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது பிளாட்டின் மூடிய பால்கனியின் கண்ணாடியை சுத்தம் செய்ய பால்கனி ஓரத்தில் வந்தார். விறுவிறுவென சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

எதிர் பிளாக்கில் வசிக்கும் ஸ்ருதி தாக்கூர்  பலமுறை அவரை அழைத்தும் அவர் கவனிக்கவில்லை. உடனே இச்சம்பவத்தை தனது மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து ஸ்ருதி, நாளிதழுக்கு பேட்டி ஒன்றும் அளித்துள்ளார். அதில் ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேளையில் எங்கள் வீட்டு  ஜன்னலில் இருந்து இந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டேன்.

 ஆனால் அந்த பெண்மணி சுத்தம் செய்வதிலேயே குறியாக இருந்தார். அப்படி பால்கனியின் ஓரத்தில் நிற்பது மிகவும் ஆபத்தானது என அறிந்து வீட்டிலிருந்து எனது மகளை  அவர்களின் வீட்டிற்கு அனுப்பி தவறை அறிவுறுத்தினேன். அதன் பிறகு தான் அங்கிருந்து இறங்கி உள்ளே சென்றாள் எனத் தெரிவித்துள்ளார். 

இது போன்ற ஆபத்தான சம்பவங்களால் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட்டு விடலாம். இதனை உணர்த்தவே வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளேன். இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் கிண்டலடித்தும், சிலர் எச்சரித்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

From around the web