பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

 
elephant

மேற்கு வங்காளத்தில் மிதினாபுரத்தில் மிகப்பெரிய வனம் ஒன்று அமைந்துள்ளது. இதில் நள்ளிரவு 1 மணிக்கு ஒரு யானை பள்ளத்தில் விழுந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை மீட்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 4 மணிக்கு  மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. யானையை  பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு பணிகள் குறித்து ஐஎப்எஸ் அதிகாரி  தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை   பதிவிட்டுள்ளார், அதில் மிதினாபுரத்தில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது.  ஆர்க்கிமிடிஸ் கொள்கையைப் பயன்படுத்தி அந்த யானை மீட்கப்பட்டது. ஆர்க்கிமிடிஸ் கொள்கைபடி  “ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் உடலில் செலுத்தப்படும் மேல்நோக்கி மிதக்கும் விசையானது, இடம்பெயர்ந்த திரவத்தின் நிறை மையத்தில் உடல் இடம்பெயர்ந்து மேல்நோக்கிச் செயல்படும் திரவத்தின் எடைக்குச் சமம்

 


இதுவரை இந்த வீடியோ  1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, வீடியோவை பார்த்த மக்கள் யானையை காப்பாற்றியதற்காக மீட்புக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க...

ரசிகரின் அன்பு தொல்லை! கீழே விழுந்த பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!!!

பகீர்! 4வது மாடியில் நின்றபடியே கண்ணாடியைக் கழுவும் பெண்மணி!

From around the web