ரசிகரின் அன்பு தொல்லை! கீழே விழுந்த பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!!!

 
pawan kalyan

நடிகர் பவன் கல்யாண்  தெலுங்கு திரையுலகில் திரைப்பட நடிகர் மட்டுமல்ல  தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் மற்றும் அரசியல்வாதி  என பன்முகத் திறமை கொண்டவராக அறியப்படுகிறார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் இளைய தம்பி. அத்துடன் ஜனா சேனா கட்சியின் நிறுவனர்.


இவர் சமீபத்தில் நரசாபுரத்தில்   ஒரு ரசிகர்  பொது இடத்தில் அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றார். அப்போது திடீரென  காரில் இருந்து  கீழே விழுந்தார். 
பிப்ரவரி 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது ஜனசேனா கட்சி பணிக்காக  நரசாபுரத்தில் இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அவரை கட்டிப்பிடிக்க முயன்றதால்,  காரில் இருந்து  வழுக்கி விழுந்தார். 

பவன் கல்யாண்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில்  பவன் தனது காரின் கூரையில் நின்று மக்களைப் பார்த்து கை அசைக்கிறார். வீடியோவில் பவன் கல்யாணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.  உடனடியாக எழுந்து நிற்பதை காணமுடிகிறது. அவர் தரப்பில் இருந்து காயம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web