அதிர்ச்சி... 31வது மாடியில் தவறி விழுந்து என்ஜினீயர் பலி!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரின் இந்திரபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டது. மென்பொருள் என்ஜினீயர் சத்தியம் திரிபாதி (27) நேற்று முன்தினம் இரவில் 31வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
திரிபாதி தனது நண்பர் ஹர்திக் சிங் மற்றும் கட்டிட விற்பனையாளருடன் பிளாட் ஒன்றை பார்வையிட சென்றிருந்தார். சுமார் 50 நிமிடங்கள் அந்த இடத்தில் பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டது.
ஹர்திக் சிங் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பிறகு போலீசார் விரைந்து வந்து திரிபாதியை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக அறிவித்தனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள், மேலும் அவர் தள்ளிவிடப்பட்டாரா அல்லது விபத்து காரணமா என்பதைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!