அதிர்ச்சி ...  உலகிலேயே மதுபானப் பிரியர்கள் அதிகம் உள்ளவர்களில் இந்தியா முதலிடம்!  

 
 

 

ஒருகாலத்தில் மேலை நாடுகளின் கலாச்சாரமாகக் கருதப்பட்ட மதுபானம், இப்போது இந்திய சமூகத்திலும் பெருமளவில் பரவியுள்ளது. ஆண்கள், பெண்கள் என வேறுபாடில்லாமல் மதுபானம் அருந்துவது சாதாரணமான ஒன்றாக மாறி வருகிறது. இதனால், இந்தியா தற்போது உலகில் மதுபானம் அதிகம் நுகரும் நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது.

உலகளவில் ஆல்கஹால் நுகர்வை ஆய்வு செய்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபான பயன்பாடு 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 44 கோடி லிட்டர் மதுபானங்கள் நுகர்க்கப்பட்டுள்ளன. விஸ்கி விற்பனை 7 சதவீதம், வோட்கா 10 சதவீதம், ரம் 2 சதவீதம், ஜின் 3 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாராகும் மதுபானங்கள் தரம் உயர்ந்ததாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் மக்களிடையே அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய மது சந்தைகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதே வளர்ச்சி தொடருமானால், 2027 ஆம் ஆண்டில் ஜப்பானையும், 2033 ஆம் ஆண்டில் ஜெர்மனியையும் முந்தி, உலகின் 5-வது பெரிய மதுபான நுகர்வு நாடாக இந்தியா மாறும் என ஆய்வு தெரிவிக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!