undefined

அதிர்ச்சி வீடியோ... திருமண ஊர்வலத்தில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் மரணம்!

 

உத்தரபிரதேச மாநிலத்தில், திருமண ஊர்வலம் ஒன்றின் போது, திடீரென எதிர்பாராமல் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தரபிரதேச மாநிலம் மவு மாவட்டம் கோஷியில் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். மேள தாளம் முழங்க வெகு ஆர்ப்பாட்டத்துடன் சந்தோஷமாக துவங்கிய ஊர்வலம், குறுகலான தெரு ஒன்றினுள் நுழைந்து சென்றது. அப்போது திடீரென அந்த  தெருவில் இருந்த பள்ளி ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு சென்றவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஊர்வலத்தில் சென்றவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்க, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!