இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தில்லி வருகை! 

 
 

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, வியாழக்கிழமை காலை அரசு முறைப் பயணமாக தில்லி வந்தடைந்தார். பிரதமராகப் பதவியேற்ற பிறகு இது அவரது முதலாவது இந்தியப் பயணம் ஆகும். தில்லி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அக்டோபர் 18 வரை இந்தியாவில் தங்கவுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து, இருநாட்டு உறவுகள் மற்றும் கூட்டணித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இலங்கை கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் அமரசூரிய, தில்லி ஐஐடி மற்றும் என்ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களை நேரில் பார்வையிட உள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் அவர், தன் பழைய கல்வி நிலையமான தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கும் செல்லவுள்ளார்.முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?