undefined

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முடிவுக்கு வந்தது! 27 ஆண்டு கால சேவையை நிறுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்!

 

27 வருடங்களாக இணைய உலகில், மக்களுக்கு சேவை வழங்கி வந்த இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை முடிவுக்கு கொண்டு வருகிறது மைக்ரோ சாப்ட் நிறுவனம். மைக்ரோ சாப்ட்வேர் உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமாக விளங்கி வருகிறது. இது கடந்த 1975ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பல்வேறு சாப்ட்வேர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளத. இதன் தலைமையகம் அமெரிக்க தலைநகரமான வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரில் அமைந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 1955ம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியது. இதனை உலகில் உள்ள மக்கள் பெருமளவில் பயன்படுத்தி பலன் அடைந்தனர். இந்த சாப்ட்வேரை பெரும்பான்மையான வங்கிகள், ஐடி நிறுவனங்கள் தங்கள் முதன்மை பிரவுசிங்காக பயன்படுத்தி தங்கள் முக்கிய பணிகளை மேற்கொண்டு வந்தன. மேலும் இணையதள உலகில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது.

அதன் பிறகு பல்வேறு இன்டர்நெட் பிரவுசர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மைக்ரோ சாப்ட்வேரின் இன்டர் எக்ஸ்புளோரரின் பயன்பாடு கணிசமான அளவுக்கு குறைந்துபோனது. இதனால் மைக்ரோ சாப்ட்வேர் நிறுவனம் தொழில் ரீதியாக நஷ்டத்தை சந்தித்தது. இதைத்தொடர்ந்து 27 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து மக்கள் பயன்படுத்தி வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோளரின் சேவை தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கூகுள் குரோம், மொசில்லா உள்ளிட்ட பல்வேறு பிரவுசர்களை மக்கள் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் தேவை குறைந்து போனதன் விளைவாகவே இதன் சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக மைக்ரோ சாப்ட்வேர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை