undefined

கல்லூரி மாணவர்களுக்கு கிரியேட்டிவ் டிசைன் போட்டி... மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

 

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த கிரியேட்டிவ் டிசைன் போட்டியில் பங்கு பெறலாம். “மெட்ரோ இரயிலை பயன்படுத்தவும் - உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும்” என்கிற தலைப்பு தான் கருப்பொருள். இந்த தலைப்பை மையமாக கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த போட்டியில் பங்குபெற ஆன்லைன் படிவம் மூலமாக பதிவு செய்ய வேண்உம். நாளை ஜனவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 22, 2024 வரை போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களது கிரியேட்டிவ் டிசைன்களை பதிவு செய்யலாம். போட்டியில் பங்கு பெறுவதற்கு சென்னையில் உள்ள அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களும் தகுதியுடையவர்களாவர்.

மாணவர்கள் தங்களது கிரியேட்டிவ் டிசைன்களை வீடியோக்கள், அனிமேஷன்கள், ஆடியோ காட்சிகள் அல்லது GIF-கள் என எந்த வடிவத்திலும் குறைந்தது 30 வினாடிகள் முதல் அதிகபட்சமாக 60 வினாடிகள் கால அளவில் உருவாக்கலாம்.

போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000, 2வது பரிசாக ரூ.10,000, 3வது பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கு பெற https://forms.gle/oa3qyGG3kmW2vHn16 இணைப்பில் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு, lmc@cmrl.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும். (“Creative Design Competition for Students” என்ற தலைப்பில் (Subject) உள்ள மின்னஞ்சல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்,

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!