பகீர் வீடியோ... விமான ஓடுபாதையில் அமர்ந்து உணவருந்திய பயணிகள்!
அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக மும்பை விமான நிலையத்தில் ஓடுதளத்தில் பயணிகள் சாவகாசமாக தரையில் அமர்ந்து உணவருந்தும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திற்கும் மும்பை விமான நிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதன் காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று டெல்லியில் இருந்து கோவா செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரமாக கிளம்பாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் விமானியைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சி வீடியோவாக வெளியானதையடுத்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் ஆகியவை விளக்கம் அளித்து இருந்தன. கடும் பனிமூட்டம் காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், மும்பைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
மும்பையில் விமானத்துடன் படிகள் இணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறியுள்ளனர். தொடர்ந்து ஓடுதளத்துக்கு அருகில் விமானம் நிறுத்தப்படும் டார்மாக் பகுதியில் அமர்ந்து தாங்கள் வைத்திருந்த உணவு வகைகளை சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முயற்சித்ததாகவும், ஆனால் அது தோல்வியைத் தழுவியதாகவும் விமான நிலைய செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதால் மும்பையில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக தங்கள் பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, மும்பை விமான நிலைய நிர்வாகம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!