பள்ளி மாணவர்களுக்கு 10 உபகரணங்கள் இலவசம்!! அன்பில் மகேஷ் அதிரடி!!

 


மதுரை நாகமலை புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.  இந்த முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.  இதில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகோபால், மதுரை மாட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்த முகாமில் பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.


 
பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  பள்ளிக்கல்வித்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது என்றும், இது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும்,  10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு மனம் தளரக்கூடாது என கூறிய அவர், மதிப்பெண் குறைந்த மாணவ-மாணவிகள் தோல்வியடைந்து விட்டோம் என்ற விரக்தி அடையாமல் அடுத்த கட்ட தேர்வில் வெற்றி பெற்று தனித்திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். 


மேலும், ஜூலை மாதமே மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு தடையில்லாமல் உயர்கல்வியை மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும்,  தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள் தோல்வி என்ற எண்ணத்தை மாற்றி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். தெடர்ந்து பேசிய அவர்,  தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் இவைகள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். 

மேலும், தமிழகம் முழுவதும் தற்போது 9474 காலிபணி இடங்கள் உள்ளதாகவும்,  தற்போது ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்,   அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 10 உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை