ரயில் விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு ரூ10லட்சம் நிவாரணத் தொகை!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா பகுதியில் நேற்று பிற்பகலில் சண்டிகர்-திப்ரூகர் செல்லும் விரைவு ரயில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் வரை தடம்புரண்ட நிலையில் தற்போது மீட்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து மீண்டும் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து இந்திய ரயில்வே அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணத் தொகையும், சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் வழங்கப்படும் ” என அறிவித்துள்ளது.
இந்நிலையில், சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீரென தடம் புரண்டன. இதில் 4 ஏசி பெட்டிகளும் அடங்கும். இந்த பெட்டிகள் தடம் புரண்டதால், பயணிகள் இடிபாடுகளில் சிக்கினர். இதையடுத்து, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா