75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி... பிரதமர் தொடங்கி வைப்பு!  
 

 


 
பீகார் மாநிலத்தில்  மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி  மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத்   தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10000  செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என  பீகார்  மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் பல மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பாட்னாவிலிருந்து காணொளி மூலம் கலந்துகொண்டனர்.மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் திட்டத்தின் தொடக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி  இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் பயணடைவார். இந்தத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையால் தான் ஈர்க்கப்பட்டதாகப் பிரதமர் கூறியுள்ளார்.   பீகார் பெண்கள் மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள், அழகுசாதனப் பொருள்கள், பொம்மைகள் மற்றும் எழுதுபொருள்கள் விற்கும் கடைகளைத் திறக்கலாம்.கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு போன்ற கால்நடை தொடர்பான தொழில்களையும் அவர்கள் தொடரலாம். இந்தத் தொழில்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும் எனக்  கூறினார். இங்கு ஏற்கெனவே சுய உதவிக் குழுக்களின் வலுவான வலையமைப்பு உள்ளது எனவும், இங்கு சுமார் 11 லட்சம் குழுக்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன எனக்  குறிப்பிட்டார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?