10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!! தொடரும் சோகம்!!

 

தமிழகத்தில்  10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும்.

இந்நிலையில், சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த செல்வி என்பவரின் மகன் முகேஷ் (15). இவர் சென்னை சிந்தாதிரிபேட்டை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முகேஷ் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட முகேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தூக்கில் தொங்குவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் முகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மாணவரது இறப்பு குறித்து விசாரித்து நடத்தி வருகின்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை