undefined

11 மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்....  இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடரும் அட்டூழியம்! 

 
 

நாகப்பட்டினம் நம்பியார் நகரில் வசித்து வருபவர்  சந்திரபாபு. 60 வயதான இவருக்கு சொந்தமான  பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல்(26), சுகுமார்(31), திருமுருகன்(31), முருகன்(38), அருண் (27)  6 பேரும்  நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணிக்கு  நம்பியார்நகர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 

கோடியக்கரை கிழக்கே இரவு 8 மணிக்கு  நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர் 8 பேர் வந்து படகை சுற்றி வளைத்தனர். இரும்பு கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் மீனவர்கள் மீது சராமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.  அதில் ஒரு வெள்ளி செயின், ஒரு சுசுகி இஞ்சின், செல்போன் 1, ஜி.பி.எஸ் கருவி, லைட் பேட்டரி, வாக்கி டாக்கி ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.


அதே போல்  நாகப்பட்டினம் நம்பியார் நகரில் வசித்து வரும் 30 வயதான  சசிக்குமார்  பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த உதயசங்கர்(28), சிவசங்கர்(25), கிருபா(29), கமலேஷ் (19) நால்வருடன் சேர்ந்து  மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரை கிழக்கே இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற் கொள்ளையர்கள், சசிக்குமார் பைபர் படகை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அத்துடன், சுசுகி இஞ்சின், ஜிபிஎஸ் கருவி, எக்கோ சவுண்டர், செல் 5, 500 கிலோ வலை ஆகியவற்றை பறித்த சென்றனர். கொள்ளையர்கள் பறித்து சென்ற மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு ரூ.4 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த 11 பேரும் நேற்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து  கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?