undefined

 கொடைக்கானல் குளிரில் 12 கல்லூரி மாணவிகள்  மருத்துவமனையில் அட்மிட்!  

 
 

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் நிலவுவது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மாதத்தில் உறைபனி அளவுக்கு வெப்பநிலை குறையும்.

இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் குழு ஒன்று போதிய கம்பளி ஆடைகள் இல்லாமல் கொடைக்கானல் சுற்றுலா வந்திருந்தது. நள்ளிரவு செல்லச் செல்ல குளிர் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால், 9 மாணவிகளும் அவர்களுடன் வந்த 3 பேரும் கடும் நடுக்கத்துடன் உடல் நலக்குறைவுக்கு ஆளானனர். இதையடுத்து, அனைவரும் உடனடியாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவர்கள் ஹீட்டர் வசதியுடன் உடல் சூடு ஏற்ற சிகிச்சை அளித்தனர். சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அனைவரின் உடல்நிலையும் சீராகி மீண்டும் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, தற்போதைய கடும் குளிரை கருத்தில் கொண்டு கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகள், ஸ்வெட்டர்கள், ஜெர்க்கின்கள் போன்ற சூடேற்ற ஆடைகள் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!