2 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு 12 ஆண்டு சிறை!! கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

 

சென்னையில் போதை மாத்திரை கடத்திய 2 பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறப்பு கோர்ட்டு தண்டனை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கடந்த 2020ம் ஆண்டு சென்னை கொளத்தூர் செந்தில்நகரில் போதை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் சுமமர் இரண்டனை எடை கொண்ட  கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளையும் ஓட்டி வந்த கொளத்தூர் தேவி நகர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த வசந்தகுமார், கொளத்தூர் சந்தோஷ்நகர் நிஷாந்த் ராயன், டெல்லியைச் சேர்ந்த பாலச்சந்தர் ஆகிய 3 பேரை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் விசாரணை, சென்னை போதைப்  பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி திருமகள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது. போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் வழக்கு குறித்து வாதாடினார்.இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, வசந்தகுமார் உள்ளிட்ட 3 குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை உறுதி செய்தார். பின்னர் குற்றவாளிகள் வசந்தகுமார், நிஷாந்த் ராயன் ஆகிய 2 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் இரண்டரை லட்ச ரூபாய் அவராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  

மற்றொரு குற்றவாளியான பாலச்சந்தருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.கடந்த 2 ஆண்டுகளாக நடந்த வந்த போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்கில் தற்போது 3 குற்றவாளிகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை